மார்க்சிஸ்ட் சாலைமறியல்

சங்கரன்கோவில், ஜூன் 14:  நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரியும் சங்கரன்கோவில் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சாலைமறியல் போராட்டம் நடந்தது. தாலுகா செயலாளர் அசோக்ராஜ் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற 21 பேரை போலீசார் கைது செய்தனர். திருவேங்கடம் மெயின் பஜாரில், மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் வேணுகோபால் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ராதாபுரத்தில் பஸ் நிலையம் முன்பு தாலுகா செயலாளர் குட்டன் தலைமையில் சாலைமறியல் நடந்தது. சிவகிரியில் பழைய போலீஸ் ஸ்டேஷன் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமை வகித்தார். இந்த மறியல் போராட்டத்தால் கொல்லம் - திருமங்கலம் சாலையில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertising
Advertising

Related Stories: