பசுமை கரங்கள் சார்பில் மரக்கன்று நடும் விழா

வள்ளியூர், ஜூன் 14:  பசுமை கரங்கள் சார்பில் வள்ளியூர் வட்டார கல்வி மையம் அலுவலகத்தில் மரக்கன்று நடும்விழா நடந்தது. விழாவிற்கு பசுமைக்கரங்கள் செயலாளர் மலையாண்டி தலைமை வகித்தார் தலைவர் ஜாண் வின்சென்ட்  முன்னிலை வகித்தார். வட்டார கல்வி அலுவலர் னிவாசன் வரவேற்றார். வட்டார கல்வி அலுவலர் உமாசங்கர், டிஜே.ஆர். தேவேந்திரன் மரக் கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர். சிறப்பு விருந்தினர்கள் ஆதி பாண்டி, ஏடிஆர் துரை பேசினர்.

பசுமைக்கரங்கள் நிர்வாகிகள் செயல் தலைவர் வெங்கட்ரமணன், கவின்வேந்தன், ராமமூர்த்தி, பழனி, முன்னாள் கவுன்சிலர் விஜி வேலாயுதம், பள்ளி தலைமைஆசிரியர் முனியப்பபிள்ளை, ஆசிரியர் ரொபிடெக்ஸ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

Related Stories: