செங்கோட்டையில் நீதிபதிக்கு பாராட்டு விழா

செங்கோட்டை, ஜூன் 14:  செங்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிபதி லிங்கம், நீலகிரி மாவட்டம் குன்னூர் சார்பு நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று பணியிட மாறுதல் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு செங்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், பாராட்டு விழா மற்றும் பிரிவுபசார விழா நடந்தது. சங்க செயலாளர் அருண் வரவேற்றார். தலைவர் வெங்கடேசன் வாழ்த்திப் பேசினார். மேலும் செங்கோட்டை மாவட்ட உரிமையியல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஹரி ராமகிருஷ்ணனுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் முத்துக்குமாரசாமி, கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியம், அருணாசலம், மாரியப்பன், சைலபதி, சிவஞானம், ஆதி பாலசுப்பிரமணியன், அரசு வழக்கறிஞர் பரணீந்தர் ஆகியோர் பேசினர். இதில் வழக்கறிஞர்கள் மூர்த்தி, சங்கரலிங்கம், ஆசாத், பழனிகுமார், மாரிமுத்து, சத்தியசங்கர், முத்துராம கிருஷ்ணவேல், செல்வம், கரிசல் அருண், நல்லையா, சுபசேகர், சிதம்பரம், திவாகரன் ராஜாராம், குமார், முத்து, பாத்திமா உள்பட பலர் கலந்து கொண்டனர். நீதிபதி லிங்கம்  ஏற்புரை ஆற்றினார். இணை செயலாளர் கார்த்திகை ராஜன் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: