கீழப்பாவூர் கூட்டுறவு கடன் சங்கம் ரூ.15.78 கோடி கடன் வழங்கல்

நெல்லை, ஜூன் 14:  கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடப்பாண்டில் ரூ.15.78 கோடி கடன் வழங்கியுள்ளது. இச்சங்கம் 1923 முதல் கீழப்பாவூர் பேரூராட்சி, குலசேகரப்பட்டி, மேலப்பாவூர், இனாம் வெள்ளக்கால் ஊராட்சிகளை எல்லையாக கொண்டுள்ளது. இச்சங்கம் பயிர் கடனாக ரூ.297.15 லட்சமும், நகைக்கடன் ரூ.910.14 லட்சமும், தானிய ஈட்டுக்கடன் ரூ.249.72 லட்சமும், மகளிர்குழு கடன் ரூ.77.78 லட்சமும், வீட்டுக்கடன் ரூ.9.50 லட்சமும், இதர வகை கடனாக ரூ.33.45 லட்சமும் என ரூ.15.78 கோடிக்கு கடன் வழங்கியுள்ளது. 2017-18ம் ஆண்டில் ரூ.32.23 லட்சம் லாபம் ஈட்டி உறுப்பினர்களுக்கு 14 சதவீத டிவிடெண்ட் வழங்கி வருகிறது.  மேலும் சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பொதுசேவை மையம் மூலம் வருமான சான்று, இருப்பிடச்சான்று, சாதி சான்று, முதல் பட்டதாரி சான்று, இதர பிற்பட்ட வகுப்பினர் சான்று, திருமண உதவித்திட்டம்,  இரண்டு பெண் குழந்தைகள் திட்டம், பட்டா மாறுதல் சேவைகளை கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.  அரசு நிர்ணய விலையில் உரங்கள் விற்கப்படுகின்றன. சங்கத்தில் தனிநபர் பாதுகாப்பு பெட்டக வசதியும் உள்ளது. இத்தகவலை நெல்லை மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் ரேவதி சங்கர் தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: