மூலைக்கரைப்பட்டி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

நெல்லை, ஜூன் 14:  மூலைக்கரைப்பட்டி கார்த்திகை தெரு காந்தாரி அம்மன், மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் கோயில் ஜூர்ணோத்தாரண மகா கும்பாபிஷேக விழா இன்று (14ம்தேதி) காலை 6.10க்கு மேல் 7.05 மணிக்குள் நடக்கிறது. இதையொட்டி கடந்த 12ம் தேதி காலை கணபதி ஹோமம், கோ பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து கணபதி பூஜை, புண்யாக வாஜனம், வாஸ்து சாந்தி, தீர்த்த ஸங்கர்ணம், முதல் கால யாகசாலை பூஜை, வேதபாராயணம் தீபாராதனை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாகுதி, வேதபாராய ண ம் தீபாராதனை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, சதுர்வேத பாராயணம் தீபாராதனை இரவு யந்தர ஸ்தாபனம் நடந்தது. இன்று (14ம் தேதி) காலை 4.30 மணிக்கு  நான்காம் யாகசாலை பூஜை, மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கடம் புறப்பாடு, தொடர்ந்து 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் விமானம் மற்றும் காந்தாரி அம்மன், மாரியம்மன், உச்சினிமாகாளி அம்மன் மகா கும்பாபிஷேகமும், மகா அபிஷேகமும் நடக்கிறது. பின்னர் அலங்கார தீபாராதனை, பிரசாரம் வழங்குதல், திருக்கார்த்திகை மடத்தில் மகேஸ்வர பூஜை, அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை சங்கரலிங்கம் பிள்ளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: