பணகுடி 4 வழிச்சாலையில் மேம்பால பணி மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் வெற்றி

பணகுடி, ஜூன் 14:  பணகுடி நான்கு வழிச்சாலையில் நடந்து வரும் மேம்பால பணியை நல்லகண்ணு பார்வையிட்டார். அப்போது மக்களின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது, என்றார். பணகுடியில் நான்குவழிச்சாலையில் ரூ.48 கோடி செலவில் மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் கன்னியாகுமரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் நெல்லை தொகுதி திமுக எம்பி ஞானதிரவியம் ஆகியோர் மேம்பால பணிகளை பார்வையிட்டனர். பின்னர் நல்லகண்ணு நிருபர்களிடம் கூறுகையில், பணகுடி நான்கு வழிச்சாலையில் நிகழ்ந்த தொடர் விபத்துகளை தடுக்க அனைத்து கட்சியினர், பொதுமக்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து செயல்பட்டதற்கு நல்ல பலன் கிடைத்து உள்ளது. இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

Advertising
Advertising

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி நிலைப்பாடு எடுக்கப்படும். அதுதான் எங்களது நிலைப்பாடாகவும் இருக்கும், என்றார். ஞானதிரவியம் எம்பி கூறியதாவது: பணகுடி பாலப்பணியை விரைந்து முடிக்க என்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வேன். நமது பகுதி மக்களை அச்சுறுத்தும் அணுக்கழிவு மையத்தை வரவிடாமல் தடுப்பதே எனது முதல் நடவடிக்கையாக இருக்கும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பேசி போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும், என்றார்.  நிகழ்ச்சியில் திமுக மாநில பொதுகுழு உறுப்பினர் ஜோசப் பெல்சி, மீனவரணி செயலாளர் எரிக்ஜூட், இளைஞரணி துணை அமைப்பாளர் ஆதிபரமேஸ்வரன், வழக்கறிஞர் பிரிவு சகாய புஷ்பராஜ், விசுவாசபுரம் தங்கதுரை, பிவின்சன், பணகுடி நகர செயலாளர் தமிழ்வாணன், இளைஞரணி கோபி கோபாலகண்ணன், மாவட்ட பிரதிநிதி மாணிக்கம், அசோக்குமார், நகர தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் விஜயகுமார், மதிமுக சங்கர், இந்திய கம்யூ. நகர செயலாளர் பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.

Related Stories: