எழிலகத்தில் ரூ5 கோடி செலவில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம்

சென்னை: எழிலகத்தில் ரூ15 கோடி செலவில் பேரிடர் மேலாண்மை பயிற்சி நிலையம் கட்டும் பணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி மற்றும் வைகுண்டம் ஆகிய இடங்களில் ரூ4 கோடியே 79 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்கள், சிவகங்கை மாவட்டம் காளையர்கோயில் மற்றும் சிங்கம்புணரி, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஆகிய இடங்களில் ரூ8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடங்கள் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து, சென்னை எழிலகத்தில் ரூ15 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட உள்ள பேரிடர் மேலாண்மை அலுவலகம், பயிற்சி நிலையம் மற்றும் மாநில அவசர கட்டுப்பாட்டு மையம்  ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநரகத்தில் காலியாக உள்ள 101 நிலஅளவர் மற்றும் 157 வரைவாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

Advertising
Advertising

Related Stories: