மதுபாட்டில் கேட்டு பார் ஊழியர் தகராறு நடவடிக்கை கோரி காவல் நிலையம் முற்றுகை

பெரம்பூர்: வண்ணாரப்பேட்டை, சின்ன மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையை நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மூடிய நிலையில் பார் ஊழியர் தங்கதுரை (50) மதுபாட்டில் கேட்டுள்ளார். அதற்கு கண்காணிப்பாளர் தினகரன் (40) நேரம் முடிந்துவிட்டதாக கூறி மதுபாட்டில் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசில் டாஸ்மாக் கண்காணிப்பாளர் தினகரன் நேற்று மதியம் புகாரளித்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்காததோடு வடசென்னை டாஸ்மாக் கடை மேலாளரிடம் சென்று பிரச்னைக்கு தீர்வு காணுமாறு கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த 50க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள்   வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வடசென்னையில் 100க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை நேற்று மாலை 3 மணியளவில் இழுத்து மூடினர். இதனால் டாஸ்மாக் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertising
Advertising

Related Stories: