இடைப்பாடி சந்தையில் 84 டன் காய்கறிகள் ₹26 லட்சத்திற்கு விற்பனை

இடைப்பாடி, ஜூன் 13: இடைப்பாடி புதன்சந்தையில், 84 டன் காய்கறிகள் ₹26 லட்சத்திற்கு விற்பனையானது. இடைப்பாடியில் நேற்று நடந்த வாரச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 84 டன் காய்கறிகள், 1700 சேவல்கள், 10 டன் பலாபழம் உள்ளிட்டவைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில், தக்காளி (27கிலோ கொண்ட பெட்டி) ₹900-₹1000 வரையும், பீன்ஸ்(1கிலோ) ₹100, கேரட் ₹55, முட்டைகோஸ் ₹25, உருளைகிழங்கு ₹15-₹20, பீட்ரூட் ₹30, இஞ்சி ₹100-140, கத்தரிகாய் ₹20-35, பெரிய வெங்காயம் ₹20-₹24, சின்ன வெங்காயம் ₹40-50, பலாப்பழம் ₹50-250, தர்ப்பூசணி ₹10-20, மாம்பழம் ₹20-40, முலாம்பழம் ₹30 வரை விற்பனையானது.

Advertising
Advertising

முகூர்த்தநாள் என்பதால் கடந்த வாரத்தை விட நடப்பு வாரத்தில் காய்கறிகள் விலை அதிகரித்து காணப்பட்டது. இதேபோல், கால்நடைகளுக்கான கயிறு, சங்கு, சலங்கை, மணி ஆகியவை ₹10-80 வரையும், மூங்கில் கூடைகள் ₹40-120, பானை ₹50-200, சேவல் ₹200-900, கோழி ₹100-600 வரையும் விற்பனையானது. மொத்தமாக, ₹26 லட்சத்திற்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: