மேட்டூரில் வாக்காளர்களுக்கு திமுக எம்பி நன்றி தெரிவிப்பு

மேட்டூர், ஜூன் 13:மேட்டூரில் டாக்டர் செந்தில்குமார் எம்பி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில், தர்மபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் செந்தில்குமார் எம்பி, மேட்டூர் நகராட்சி பகுதியில் வாக்காளர்களை சந்தித்து நன்றி கூறினார். சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார்.

Advertising
Advertising

அவைத்தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளான தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் நின்றபடி, செந்தில்குமார் எம்பி நன்றி தெரிவித்தார். இதனையடுத்து, மேட்டூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து, செந்தில்குமார் எம்பி பேசுகையில், ‘மேட்டூர் நகராட்சியில் பல இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. சாக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.

சாலைகளில் கழிவுநீர் தேங்கி உள்ளது. உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு நடத்தாததே இதற்கு காரணம். விரைவில் திமுக ஆட்சிக்கு வரும். அப்போது உங்களின் அனைத்து குறைகளும் நீக்கப்பட்டு, அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்படும்,’ என்றார்.

Related Stories: