கொடுத்த கடனுக்காக வீடு புகுந்து பத்திரங்களை எடுத்து சென்ற பைனான்சியர் மீது வழக்கு

திருச்சி, ஜூன் 13: திருச்சி கோட்டை மாப்பிள்ளை நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சந்திரகுமார்(52), பைனான்சியர். இவரது உறவினர் மயிலாடுதுறை பட்டமங்கலம் புதுத்தெருவை ேசர்ந்த ராதாகிருஷ்ணன். இவரும் பைனான்சியர். இவரிடம் கடந்தாண்டு சந்திரகுமார் கடனாக ரூ.8 லட்சம் வாங்கினார். அதில் ரூ.3 லட்சம் திருப்பி கொடுத்துவிட்டார். மீதமுள்ள பணம் கொடுக்க காலதாமதமானது. இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டு திருவானைக்காவலில் உள்ள நண்பர் சுடர்மதியுடன் சந்திரகுமார் வீட்டுக்கு வந்த ராதாகிருஷ்ணன் தகராறில் ஈடுபட்டு அவரது வீட்டில் இருந்த பத்திரங்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். பலமுறை பத்திரங்களை திருப்பி தரக்கூறியும் தரவில்லை. இது குறித்து விசாரித்து நடவடிக்ைக எடுக்க போலீசாருக்கு உத்தரவிடக்கோரி சந்திரகுமார் திருச்சி ஜேஎம் 1 நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். விசாரித்த நீதிமன்றம் நடவடிக்ைக எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் ராதாகிருஷ்ணன் மற்றும் சுடர்மதி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிந்து எஸ்ஐ தயாளன் விசாரித்து வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: