புதர் மண்டி கிடக்கும் கலெக்டர் அலுவலக கேட் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பங்கள் வரவேற்பு

திருச்சி, ஜூன் 13: திருச்சி மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.அதன்படி 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிப்பவருக்கு ரூ.1000, 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.3,000, 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.4,000, இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பு ரூ.6,000, முதுகலை பட்டம் ரூ.7000 என கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.

Advertising
Advertising

மேலும் பார்வையற்றோருக்கு கல்வி உதவித்தொகையுடன் வாசிப்பாளர் உதவித்தொகையாக 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.3,000, இளங்கலை பட்டம் ரூ.5,000, முதுகலை பட்டம் ரூ.6,000 சேர்த்து வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ளவர்கள் திருச்சி கண்டோன்மென்ட், மாவட்ட நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பத்துடன் கல்வி பயிலும் நிறுவனத்திடமிருந்து சான்றொப்பம் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகல், கடந்த ஆண்டின் மதிப்பெண் சான்று நகல், வங்கி கணக்கு புத்தக நகலுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம். இத்தகவலை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related Stories: