ரைஸ்மில் பாய்லர் வெடித்து படுகாயமடைந்த ஆபரேட்டர் சாவு

பட்டுக்கோட்டை, ஜூன் 13: பட்டுக்கோட்டை அடுத்த நைனாங்குளம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரைஸ்மில் உள்ளது. இந்த ரைஸ்மில்லில் ஆப்ரேட்டராக பாபநாசம் தாலுகா நத்தம் செண்பகபுரத்தை சேர்ந்த விஸ்வநாதன் (40), கொண்டிகுளம் நடராஜன் (45) வேலை பார்த்தனர். இந்நிலையில் கடந்த 10ம் தேதி இருவரும் ரைஸ்மில்லில் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது ரைஸ்மில்லில் உள்ள பாய்லர் திடீரென வெடித்தது. இதில் விஸ்வநாதன் மற்றும் நடராஜன் இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர் இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி விஸ்வநாதன் இறந்தார். இதுகுறித்து விஸ்வநாதனின் தந்தை ராஜப்பன், பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: