120 நிமிடத்தில் 100 தலைப்புகளில் பேசி மாணவர் கின்னஸ் சாதனை முயற்சி

கும்பகோணம், ஜூன் 13: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த ஆடுதுறை பிஸ்மி நகரை சேர்ந்தவர் ஹரிஸ் (20). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வருகிறார். இவர் தமிழில் 120 தலைப்புகளில் 120 நிமிடம் பேசி கின்னஸ் சாதனை புரிய தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் சென்னையில் உள்ள கலாம் புத்தக சாதனை அமைப்பு மூலம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் தொடர்ந்து 2 மணி நேரம் (120 நிமிடங்கள்) 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் இடைவிடாது பேசி கின்னஸ் சாதனை புரிவதற்கு முயற்சி மேற்கொண்டார். நடுவர்களாக கலாம் புத்தக சாதனை அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி குமரவேல் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.பின்னர் ஹரிஸ் பேசுகையில், தொடர்ந்து 2 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்ட தலைப்புகளில் பேசுவது தனக்கும், கேட்பவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும். தொடர்ந்து பல்வேறு தலைப்புகளை எடுத்து கொண்டு பேசி சாதனை நிகழ்த்தி காட்டுவேன் என்றார்.

Advertising
Advertising

Related Stories: