இரும்பு குடோனில் காப்பர் கொள்ளை

பல்லாவரம்: குன்றத்தூரில் வசித்து வருபவர் அயூப் (40). தொழிலதிபர். இவருக்கு, குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரியில் இரும்பு குடோன் உள்ளது. இங்கு பழைய காப்பர் பொருள்களை வாங்கி அதை உருக்கி மீண்டும் பொருள்களாக வடிவமைக்கும் வேலை நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் அயூப் இரும்பு குடோனை பூட்டி விட்டுச்சென்றார். நேற்று காலை 8 மணியளவில் மீண்டும் குடோனை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இரும்பு கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

Advertising
Advertising

உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.10 லட்சம் மதிப்பு காப்பர் பொருட்கள் கொள்ளைபோனது தெரிந்தது. மேலும் கம்பெனியில் இருந்த சிசிடிவி கேமராவை உடைத்து வயர்களை துண்டித்து, அதன் பதிவு கருவியை கொள்ளை கும்பல் எடுத்து சென்றதும் தெரிந்தது. புகாரின்பேரில் குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதி கம்பெனிகள், வீடுகளின் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Related Stories: