பள்ளிக்கரணையில் மாயமான மாணவன், மாணவி மும்பையில் மீட்பு

வேளச்சேரி: பள்ளிக்கரணையை சேர்ந்த 18 வயது மாணவன் வேளச்சேரி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பள்ளியில் மடிப்பாக்கத்தை சேர்ந்த மாணவி பிளஸ் 1 படித்து வந்தார். இருவரும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2018 டிசம்பர் 14ம் தேதி இருவரும் வீட்டில் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர்கள் வீட்டுக்கு  வரவில்லை.  

Advertising
Advertising

இதனால் பெற்றோர்கள் வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில் மாணவன் திருமண ஆசை  வார்த்தை கூறி மாணவியை அழைத்து சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் இருவரும் மும்பையில் இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.  

இதையடுத்து போலீசார் நேற்று மும்பை சென்று இருவரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் இருவரும் மைனர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மாணவனை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மாணவியை சென்னையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: