ரூ.16.79 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி, ஜூன்13:  அவிநாசியில் நேற்று நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 1,051 மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மொத்தம் ரூ.16 லட்சத்து 79 ஆயிரத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. அவிநாசி வேளா ண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. நேற்றைய ஏலத்தில் மொத்தம் 1,051 பருத்தி மூட்டைகள் வந்திருந்தன. ஏலத்தில், ஆர்.சி.எச். பி.டி. ரகப்பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5,500 முதல் ரூ.6,110 வரையிலும் ஏலம் போனது.கொட்டுரக (மட்டரக) பருத்தி மற்றும் டி.சி.எச்.ரகப்பருத்தி வரத்து இல்லை.   பருத்தி ஏல மையத்தில் மொத்தம் ரூ.16 லட்சத்து79 ஆயிரத்துக்குபருத்தி ஏல வர்த்தகம் நடைபெற்றது. அவிநாசி, பல்லடம், திருப்பூர்,கோபி, நம்பியூர்,புளியம்பட்டி,சேவூர், குன்னத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 154 விவசாயிகளும், கோவை, ஈரோடு பகுதியிலிருந்து  8 வியாபாரிகளும் ஏலத்தில் பங்கேற்றனர்.

× RELATED பூலாம்பட்டியில் ₹25 லட்சத்துக்கு பருத்தி ஏலம்