தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வுக்கு மாவட்டத்தில் 3 மையங்கள் அறிவிப்பு

திருப்பூர்,ஜூன்13:  தமிழ்நாடு முழுவதும் தொடக்கக்கல்வி பட்டயத் தேர்வு வருகிற 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வுக்கு திருப்பூர் மாவட்டத்தில் 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து திருமூர்த்தி நகரில் உள்ள அரசு ஆசிரியர் பயற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் சங்கர் கூறியுள்ளதாவது: திருப்பூர் மாவட்டத்தில் தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு வருகிற 4ம் தேதி தொடங்குகிறது. முதலாம் ஆண்டு தேர்வை 194 மாணவ, மாணவிகளும், 2ம் ஆண்டு தேர்வை 150 மாணவ, மாணவிகளும் எழுதுகிறார்கள். இந்த தேர்வுக்கு திருப்பூர் கே.எஸ்.சி.அரசு மேல்நிலைப்பள்ளி, உடுமலை ஆர்.கே.ஆர். கிரிக்ஸ் பள்ளி, தாராபுரம் பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 3 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை சிறப்பாக நடத்தி முடிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : centers ,District ,
× RELATED முதுகுளத்தூர், கடலாடி ஒன்றியத்தில் பயன்பாடின்றி கிராம சேவை மையங்கள்