×

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தின உறுதிமொழி

உடுமலை, ஜூன் 13: குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தையொட்டி, நேற்று உடுமலை பள்ளியில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ‘இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்தமாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்க என்னால் இயன்றவரை பாடுபடுவேன் எனவும் உளமார உறுதி கூறுகிறேன்’ என மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
கையெழுத்து இயக்கம்: தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் நேற்று (12ம் தேதி) கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தில், குழந்தை தொழிலாளர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபடுத்துவதை தடுத்தல் சம்பந்தமாக, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதன்படி திருப்பூர் சேவ் அமைப்பு சார்பில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று நடந்தது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையெழுத்திட்டனர். மேலும், 500க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நோட்டீஸ்களும் விநியோகிக்கப்பட்டது.

Tags : Child Labor Work Day ,
× RELATED தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த...