பவானிசாகர் அணை பகுதியில் மணல் கடத்தல்

சத்தியமங்கலம், ஜூன் 13:  பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் இரவில் மணல் திருட்டு நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் உள்ள பவானி ஆற்றில் அதிகளவில் மணல்  படிந்துள்ளது. இந்த நிலையில் நீர்த்தேக்க பகுதியில் உள்ள சித்தன்குட்டை  மற்றும் ஜெ.ஜெ.நகர் பகுதியில் இரவு நேரங்களில் சமுக விரோதிகள் மணல்  கடத்தலில் ஈடுபடுகின்றனர். ஆற்றங்கரையில் படிந்துள்ள மணலை இரவு நேரத்தில்  எடுத்து ஆற்றங்கரையோரத்தில் குவியல் குவியலாக குவித்து வைத்துள்ளனர். மணல் ஈரம் காய்ந்த பின் டிராக்டர்களில் கடத்தி சென்று புஞ்சைபுளியம்பட்டி,  மேட்டுப்பாளையம் பகுதிகளில் ஒரு லோடு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை  விற்பனை செய்கின்றனர். தினமும் நடக்கும் மணல் திருட்டால் பவானி  ஆற்றங்கரையில் படிந்துள்ள மணல் பெருமளவில் கடத்தப்படுகிறது.  பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் மணல் திருட்டை கண்டுகொள்ளாமல்  இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, பவானிசாகர் அணை  நீர்த்தேக்கப்பகுதியில் பவானி ஆற்றங்கரையில் இரவில் நடக்கும் மணல் கடத்தலை  தடுக்க வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: