சாத்தான்குளம் அருகே பெண்ணை தாக்கிய மிரட்டியவருக்கு வலை

சாத்தான்குளம், ஜூன் 13: சாத்தான்குளம் அருகே பெண்ணை தாக்கி மிரட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரத்தை சேர்ந்தவர் மாயாண்டி மனைவி ஆறுமுகக்கனி (43). இவரது மகன் பண்டாரத்துக்கும், இதே ஊரைச் சேர்ந்த காமராஜ் மகன் தினேஷ் என்பவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் தினேஷ், ஆறுமுகக்கனி வீட்டுக்குள் அத்துமீறி நூழைந்து அவரிடம் தகராறில் ஈடுபட்டார். மேலும் ஆறுமுகக்கனியை தேங்காய் மட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். இதுகுறித்து ஆறுமுகக்கனி சாத்தான்குளம்  போலீசில் புகார் செய்தார். எஸ்ஐ லூயிஸ் லாரன்ஸ் விசாரணை நடத்தி தினேசை தேடி  வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: