சாலை விபத்தில் வாலிபர் பலி

சங்கரன்கோவில்,  ஜூன் 13:  சங்கரன்கோவிலில் பைக்கில் சென்றபோது லாரியை ஓவர்டேக் செய்த போது தவறி கீழே விழுந்த வாலிபர், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார். சங்கரன்கோவில் காயிதே மில்லத் 2ம் தெருவைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் தாரிக் (21).  டிப்ளமோ படித்து முடித்த இவர், சங்கரன்கோவிலில் உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவரும், இவரது நண்பர் முகமதுவும் திருவேங்கடம் சாலையில் ஒரே பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் சென்ற லாரியை பைக்கில் ஓவர்டேக் செய்ய முயன்றனராம். இதில் பைக்கில் இருந்து தடுமாறி கீழே விழுந்த தாரிக் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: