சாலைப்பணியாளர் சங்கத்தினர் தென்காசியில் ஆர்ப்பாட்டம்

தென்காசி, ஜூன் 13: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தென்காசியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சாலைப்பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை 13 ஆண்டுகளுக்கு மேலாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போட்டுள்ள நிர்வாகத்தை கண்டிப்பது. முதன்மை இயக்குர் நிர்வாக பொறுப்பில் ஐஏஎஸ் அலுவலரை நியமிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் முகமது முஸ்தபா தலைமை வகித்தார். கிளைத் தலைவர் கசங்காத்தான், சங்கை ராமர் முன்னிலை வகித்தனர்.  மாநில செயலாளர் கோவிந்தன், கோட்ட செயலாளர் வேல்ராஜன், ஓய்வூதியர் சங்க நிர்வாகி மாரியப்பன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் துரைசிங், அகஸ்தியன், ஊரக வளர்ச்சித்துறை பிரதிநிதி சுப்பிரமணியன் பேசினர். கோட்ட பொருளாளர் சேகர் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: