மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் மோசடி

திருச்சி, ஜூன் 12: மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி திருச்சி பெண்ணிடம் ரூ.3.50 லட்சம் வாங்கி மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார். திருச்சி கருமண்டபம் மாந்தோப்பு முதல் தெருவை சேர்ந்தவர் அசாருதீன். தள்ளுவண்டியில் டிபன் கடை வைத்துள்ளார். இவரது மனைவி நிஷானாபேகம். டிபன் கடையில் கணவருக்கு உதவியாக இருந்து வருகிறார். இங்கு டிபன் சாப்பிட அடிக்கடி வந்த பொன்னகர் காமராஜபுரத்தை சேர்ந்த கணேசன்(50) என்பவருடன் தம்பதிக்கு பழக்கம் ஏற்பட்டது. கணேசன் தனக்கு அதிகாரிகள் பலரை தெரியும் என கூறியுள்ளார். மேலும் துவாக்குடியில் உள்ள ஐஐஎம் நூலகத்தில் நிஷானாபேகத்துக்கு வேலை வாங்கி தருவதாக கூறி அவரிடம் கடந்த 2017ம் ஆண்டு ரூ.3.50 லட்சம் வாங்கினார். ஆனால் இதுவரை வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து நிஷானாபேகம், துணை கமிஷனர் மயில்வாகனனிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த மாநகர குற்றப்பிரிவுக்கு துணை கமிஷனர் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தியதில் கணேசன் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories: