அமைக்கும் பணிகள் மும்முரம் ஐடிஐயில் சேர கால நீட்டிப்பு

திருச்சி, ஜூன் 12: திருச்சி மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில், மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள வழியில் விண்ணப்பிக்க காலநீடிப்பு செய்யப்பட்டுள்ளது. அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரவும், அரசு உதவி பெறும் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் சேர்ந்திடவும் மாவட்ட கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதள வழியில் விண்ணப்பிக்க 31.5.2019 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த கால அவகாசம் 15.6.2019 வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையம் திருச்சி என்ற முகவரியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை திருச்சி அரசு தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநர் மற்றும் முதல்வர் பரமேஸ்வரி தெரிவித்தார்.

Advertising
Advertising

Related Stories: