திருச்சி தேசிய கல்லூரி சார்பில்

திருச்சி, ஜூன் 12: திருச்சி தேசிய கல்லூரி நூற்றாண்டு விழா நிறைவையொட்டி கல்லூரி சார்பில் பசுமை தூய்மையை வலியுறுத்தி மனித சங்கிலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. திருச்சி ரயில் நிலையம் முதல் தலைமை தபால் நிலையம் வரை நடந்த இந்த மனித சங்கிலி நிகழ்ச்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளும், முன்னாள் மாணவர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர். மனித சங்கிலியை மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். மனித சங்கிலி நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் ரகுநாதன், முதல்வர் சுந்தரராமன், என்சிசி அதிகாரிகள் முத்துகிருஷ்ணன், ராமர் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த துறை தலைவர்கள், பேராசிரியர்கள், கல்லூரி பணியாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை கல்லூரி உடற்கல்வித்துறை தலைவர் பிரசன்ன பாலாஜி ஒருங்கிணைத்தார்.

Advertising
Advertising

Related Stories: