மயிலம் ஒன்றியத்தில் குறைந்த மின்னழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுது

மயிலம், ஜூன் 12: மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது பெரமண்டூர் கிராமம். இங்கு சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் கிராம பகுதியில்  தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது. மேலும் குறைந்த மின்னழுத்தம் அடிக்கடி ஏற்படுவதால் வீட்டிலுள்ள மின்சாதன பொருட்களான டிவி, பேன் உள்ளிட்ட பொருட்கள் வீணாகி போவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மின்தடை ஏற்படும்போது  அருகில் ஜக்காம்பேட்டையில் உள்ள துணை மின் நிலையத்தை தொடர்பு கொண்டால் பொதுமக்களுக்கு சரியான பதில் கூறுவதில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை சரிசெய்ய மின்சார வாரியம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் குற்றம் சாட்டுகின்றனர். அப்

பகுதியில் டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி பியூஸ் கட்டாகி விடுவதால்  இதனை சரிசெய்ய  நடவடிக்கை எடுக்காமல் மின்துறையினர் அலட்சியமாக செயல்படுவதாகவும் கூறுகின்றனர். எனவே பெரமண்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் எனவும், மின்தடை ஏற்பட்டால் உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: