மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

வானூர்,  ஜூன் 12: வானூர் தாலுகா டி.பரங்கனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்  மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பிரசார பேரணி நடந்தது. தலைமை ஆசிரியை  நிர்மலா தலைமை தாங்கி பேரணியை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் ஜெய்சாந்தி,  ரேவதி, ஜெகஷீலா, விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளராக  ஆசிரியர் இளங்கோவன் செயல்பட்டார். கல்வி ஆர்வலர்கள் சிவராமன், வீரமுத்து,  கோபி, அய்யனாரப்பன் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாநில  தேர்வு மற்றும் தேசிய அளவிலான தேர்வுகளுக்கு திறன் வளர்க்கும் பயிற்சிகள்  குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முக்கிய  வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் பள்ளி வளாகத்தில் முடிந்தது.

Advertising
Advertising

Related Stories: