தவறி விழுந்த முதியவர் சாவு

திருக்கோவிலூர், ஜூன் 12:  திருக்கோவிலூர் அடுத்த குலதீபமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன்(85). சம்பவத்தன்று அதிகாலை இவர் இயற்கை உபாதைக்காக தனது வீட்டில் இருந்து வெளியே வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இறந்துபோன நடராஜனின் மகன் முருகதாஸ் மணலூர்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: