விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில் அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

விழுப்புரம்,  ஜூன் 12: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள்  தொடர்பு துறையின் மூலம் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க  புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.  இப்புகைப்பட கண்காட்சியில் தமிழக அரசின் சாதனை விளக்கப் புகைப்படங்கள்  மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில், குறிப்பாக மறைந்த  தமிழக  முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்த பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலமாக அரசு  நலத்திட்ட உதவிகள் வழங்கியது, வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்தது ஆகிய  சிறப்பு புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. மாணவ மாணவிகளுக்கு  விலையில்லா லேப்டாப், சைக்கிள் வழங்குதல் உள்ளிட்ட புகைப்படங்கள் பொதுமக்களின் பார்வைக்கு  வைக்கப்பட்டிருந்தது. மேலும், தமிழகத்தின் தற்போதைய முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை புகைப்படங்கள், முதலமைச்சர் 5 திட்டங்களை  செயல்படுத்தி ஆணையிட்ட புகைப்படங்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.  அரசு  மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், வணிகர்கள், வியாபாரிகள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என 3000க்கும் மேற்பட்டோர்  புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர்.

Advertising
Advertising

Related Stories: