சரக்கு வேன் கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் 6 பேர் படுகாயம்

திருக்கோவிலூர், ஜூன் 12:  திருக்கோவிலூர் அடுத்த வடகரைதாழனூர் கிராமத்தில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் அரசு டவுன் பஸ் நேற்று காலை சென்றது. அரகண்டநல்லூருக்கு வரும் பள்ளி மாணவர்கள் இந்த பேருந்தை தவறவிட்டதால் அவ்வழியாக சென்ற சரக்கு வேனில் ஏறி பள்ளிக்கு சென்றனர். இந்த வேன் அங்குள்ள கூட்டுசாலை அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அதே ஊரைச்சேர்ந்த தென்னரசு மகள் கலைவாணி(10), ரமேஷ் மகள் ராசாத்தி(13), அருணகிரி மகள் கனிஷ்கா(13), பத்திநாதன் மகன் ஆகாஷ் உள்ளிட்ட 6 மாணவர்கள் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரையும் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் கலைவாணி மட்டும் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: