மகள் சாவில் சந்தேகம் போலீசில் தந்தை புகார்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 12:  விழுப்புரம் முத்து லேஅவுட் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன்(68), ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது மகள் ராஜப்ரியா(30) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி சரஸ்வதிநகர் பகுதியில் வசித்து வரும் அருண்சோரி என்பருக்கு திருமணம் செய்து கொடுத்தார். கடந்த 2016ம் ஆண்டு இவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்து இறந்துள்ளது. அதன் பிறகு கர்ப்பமாக இருந்த ராஜப்ரியாவை அவரது மாமியார் மைதிலி என்பவர் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட ராஜப்ரியா சம்பவத்தன்று தனது மாமியார் வீட்டில் ஸ்டவ் வெடித்து உயிரிழந்துவிட்டதாக கொடுத்த தகவலின் பேரில் ராஜேந்திரன் உளுந்தூர்பேட்டைக்கு வந்து பார்த்தார். அப்போது அவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரிந்து தீக்கிரையானது தெரியவந்தது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக ராஜேந்திரன் கொடுத்துள்ள புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.

Advertising
Advertising

Related Stories: