பெட்டி கடைக்காரரிடம் பணம் பறித்த 2 வாலிபர்கள் கைது

காலாப்பட்டு, ஜூன் 11: புதுவை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெரியமுதலியார்சாவடி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் சரவணன்(38). அப்பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று சரவணன் கடையில் இருந்தபோது, 2 வாலிபர்கள் கடைக்கு வந்துள்ளனர். அப்போது சரவணனிடம் பொருட்கள் வாங்குவது போல் நடித்த அவர்கள், திடீரென சரவணனின் பாக்கெட்டில் கையை விட்டு, ரூ.2 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு டூவீலரில் சென்று தலைமறைவாகிவிட்டனர். இதுகுறித்து புகாரின் பேரில் கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் சரவணனிடம் பணம் பறித்தது புதுச்சேரி சின்னையாபுரம் ராஜகோபால் கிராமணி தோட்டத்தை சேர்ந்த மணி மகன் மகேஷ் (26) மற்றும் கவுண்டன்பாளையம் முருகன் கோயில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் சுரேஷ் (29) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை அதிரடியாக கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: