எலக்ட்ரீசியன் தூக்குபோட்டு தற்கொலை

புதுச்சேரி, ஜூன் 11:  புதுவை, லாஸ்பேட்டை, தேவகி நகரை சேர்ந்தவர் அமலோற்பவநாதன், ஓட்டல் ஊழியர். இவரது மகன் அஜித்குமார் என்ற லியோனிதாஸ்(19). எலக்ட்ரீசியனான இவர் பெயிண்டிங் உள்ளிட்ட கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். இவர் மீது ஏற்கனவே முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டையில் அடிதடி, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், பெற்றோரின் கண்டிப்புக்கு பிறகு சில நாட்களாக குடியை கைவிட்டு வேலைக்கு சென்று வந்தாராம்.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் நேற்று முன்தினம் தனது தாய் ஆனந்தவள்ளியிடம் வெளியே செல்ல வேண்டுமென அஜித்குமார் பணம் கேட்டுள்ளார். அதற்கு மறுத்துவிட்ட தாய், நண்பர்களுடன் மீண்டும் சேர்ந்து குடிக்க போகிறாயா? என கண்டித்துவிட்டு வேலைக்கு சென்றதாக கூறப்படுகிறது.இதில் விரக்தியடைந்த அஜித்குமார் வீட்டில் மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார்வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Electrician ,suicide ,
× RELATED மருத்துவமனையில் சிகிச்சை...