லாஸ்பேட்டையில் வானியல் காட்சி நிகழ்வு

புதுச்சேரி, ஜூன் 11: புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் பொதுமக்களுக்கு வானிலை பற்றி தெரிந்து கொள்ளும் விதத்தில் ஒவ்வொரு மாதமும் வானியல் காட்சி நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்த மாதமும் நாளை (12ம் தேதி) இரவு 7 மணி முதல் 9 மணி வரை வானியல் காட்சி புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள ஹெலிபேட் மைதானத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த வானியல் காட்சியினை பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் மதிவாணன் பொதுமக்களுக்கு விளக்கிக் கூற உள்ளார்கள். மேலும் தொலைநோக்கி வழியாக அந்த நேரத்தில் வானில் தெரியும் கோள்கள், விண்மீன்கள் மற்றும் விண்மீன் கூட்டத்தினை பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு காண்பிக்கப்படும். ஜூன் மாத வானியல் வரைபடம் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியினை லாஸ்பேட்டை அப்துல் கலாம் அறிவியல் மையம் மற்றும் கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது. வானியல் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வானியல் காட்சியினை கண்டுகளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில்

கூறப்பட்டுள்ளது.

Related Stories: