நீட்தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவியின் குடும்பத்துக்கு பாமக தலைவர் ஆறுதல்

மரக்காணம், ஜூன் 11: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கூனிமேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த மோனிஷா(18) என்ற மாணவி நீட் தேர்வு தோல்வியால் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது குடும்பத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாசின் உத்தரவின் பேரில் பா.ம.க கட்சி தலைவர் ஜி.கே.மணி மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது தந்தை மோகனிடம் நிதி உதவி வழங்கி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். அப்போது ஜி.கே.. மணி கூறியதாவது, நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றார். அப்போது மாவட்டச் செயலாளர் சேது, மாநில துணைப்பொதுச் செயலாளர் சிவக்குமார், பேராசிரியர் செல்வக்குமார், மாவட்ட  பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertising
Advertising

Related Stories: