சிவானந்தயோகி நினைவு அறக்கட்டளை சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

உளுந்தூர்பேட்டை, ஜூன் 11: உளுந்தூர்பேட்டை சிவானந்தயோகி நினைவு அறக்கட்டளையின் சார்பில் அரசு பொதுத்தேர்வில் தமிழ்வழி கல்வியில் படித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நூல்வெளியீட்டு விழா உளுந்தூர்பேட்டையில் நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் டேனியல்ராஜ் முன்னிலை வகித்தார். அறக்கட்டளை நிறுவன தலைவர் தமிழ்ப்பற்றாளன் வரவேற்றார். இதில் ஓய்வு பெற்ற அரசு கல்லூரி பேராசிரியர் சற்குணம், துணை பேராசிரியர் சோபனா சிவராமன், திமுக மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினர். இதில் முன்னாள் எம்எல்ஏ திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் வசந்தவேல், முருகன், மாவட்ட துணை செயலாளர் ஆசீர்வாதம், செல்லையா, மற்றும் நிர்வாகிகள் ஹரிசுப்ரமணியன், தங்கவிசுவநாதன், இளங்கோவன், கலாசுந்தரமூர்த்தி, கருணாநிதி, மனோ, ராஜகோபால், தண்டபாணி, அன்பழகன், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: