×

குமரி மாவட்டத்தில் இடியுடன் மழை

நாகர்கோவில், மே 25: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது .  வெயிலின் காரணமாக நுங்கு, இளநீர், மற்றும் பழவகைகள் விற்பனை அதிகமாக நடந்து வருகிறது. கன்னிபூ சாகுபடி தொடங்க நாற்றங்கால் நடவு பணியில் ஈடுபட்டு இருக்கும் விவசாயிகளும் மழையை எதிர்பார்த்து இருக்கின்றனர். நேற்று காலை குமரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் மதியம் நேரத்தில் மேகங்கள் கருத்து இருந்தது. இந்நிலையில் மாலை 4.15 மணி அளவில் நாகர்கோவில் நகர பகுதியில் மிதமான மழை பெய்தது. இதனால் காலையில் அடித்த வெயிலுக்கு மாலையில் மிதமான சூழ்நிலை நிலவியது.  மலையோர பகுதியான குலேசேகரம், திருவட்டார், மற்றும் கடுக்கரை, பூதப்பாண்டி பகுதியில் மழை பெய்தது. மழையின்போது இடி மின்னல் தாக்கம் அதிகமாக இருந்தது. தக்கலை பகுதியில் லேசான மாழை பெய்தது. குளச்சல் பகுதியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஒட்டு மொத்தத்தில் குமரி மாவட்டம் முழுவதும் நேற்று மாலை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது.  நேற்று முன்தினமும் மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளை தவிர மலையோர பகுதிகளில் மழை பெய்தது. மழையின் அளவு வருமாறு: பேச்சிப்பாறை 18.8 மி.மீ, பெருஞ்சாணி 1 மி.மீ, சிற்றார் 1 பகுதியில் 9.6 மி.மீ, சிற்றார் 2 பகுதியில் 4 மி.மீ, தக்கலை 3 மி.மீ, குழித்துறை 21.2 மி.மீ, பூதப்பாண்டி 9.2 மி.மீ, ஆனைகிடங்கு 7.2 மி.மீ, புத்தன்அணை 1 மி.மீ, திற்பரப்பு 5 மி.மீட்டர் மழை பதிவாகி இருந்தது.  அணை நீர்மட்டம் : பேச்சிபாறை 2.10 அடியாக உள்ளது. அணையில் இருந்து 197 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது அணையில் இருந்து 63 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி 23.45 அடி அணைக்கு 13 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. சிற்றார் 1ல் 5.25அடி, சிற்றார் 1ல் 5.34அடி, பொய்கை 9.10 அடி, மாம்பழத்துறையாறு 42.16 அடியாக உள்ளது.


Tags : Kumari ,district ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து