×

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில்

நாகர்கோவில், மே 25 : கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எச். வசந்தகுமார் அமோக வெற்றி பெற்றுள்ளார். பா.ஜ. சார்பில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்தார். ஆனால் மத்தியில் பா.ஜ. மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பொன். ராதாகிருஷ்ணன் தோல்வி அடைந்ததால், மத்தியில் மீண்டும் பா.ஜ. ஆட்சிக்கு வந்திருப்பதை பா.ஜ.வினரால் முழுமையாக கொண்டாட முடிய வில்லை. இதனால் அந்த கட்சி தொண்டர்கள் சோகத்துடன் காணப்பட்டனர். வாக்கு எண்ணிக்கை சுற்றுகள் முடிவுகள் வெளியாக, வெளியாக அவர்கள் இடையே சோகம் அதிகரித்தது. இதனால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்தவர்கள் சோகத்துடன் வெளியேறினர். பா.ஜ. கட்சி அலுவலகமும் களை இழந்த நிலையில் இருந்தது. இதே போல் எச். வசந்தகுமார் வெற்றி பெற்றதை கூட அந்த கட்சி தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாட முடிய வில்லை. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியாத கவலை அக்கட்சி தொண்டர்கள் இடையே இருந்தது. இதனாலும் அவர்களும் ஒரு பக்கம் மகிழ்ச்சி, மற்றொருபுறம் சோகம் என்ற நிலையில் தான் காணப்பட்டனர். வழக்கமாக ேதர்தல் முடிவுகள் வெளியாகும் நிலையில், வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள கோணத்தில் கட்சி தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் முடிவுகள் வெளியானதும் பட்டாசு வெடிப்பு, இனிப்பு வழங்கல் என இரவு வரை அந்த பகுதி களை கட்டி இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் மாலையில் கூட வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள சாலை வெறிச்சோடி தான் காணப்பட்டது.  


Tags : Kanyakumari Lok Sabha ,constituency ,
× RELATED மார்த்தாண்டத்தில் ராஜேஷ்குமார் எம்எல்ஏ வாக்கு சேகரிப்பு