×

குமரியில் திருட்டு மது விற்றவர்கள் கைது

நாகர்கோவில், மே 25:  மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருட்டு மது விற்பனை நடைபெற்றது. ரூ. 110, 120 விலை உள்ள குவார்ட்டர் பாட்டில்களை அதிக விலை வைத்து விற்பனை செய்தனர். இது தொடர்பாக போலீசார் சிலரை கைது செய்தனர். குழித்துறை பகுதியில் திருட்டு மது விற்றதாக குழித்துறை சாணிவிளை பகுதியை சேர்ந்த வர்கீஸ் குமார் (46) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அழகியமண்டபம் பகுதியில் திருட்டு மது விற்றதாக மணலி நெடுவிளையை சேர்ந்த டைட்டஸ் (47) என்பவரை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான போலீசார் கைது செய்து, 6 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். ராஜாக்கமங்கலம் பருத்திவிளையில் திருட்டு மது விற்றதாக எறும்புக்காடு  வைராயிருப்பு பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31) என்பவரை கைது செய்து, 4 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கன்னியாகுமரி ஒற்றையால்விளையில் திருட்டு மது விற்றதாக சதீஷ் (39) என்பவரை போலீசார் கைது செய்து, 3 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கைதான அனைவரும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags : Gun victims ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில்...