×

பிரம்மா-சரஸ்வதி திருக்கல்யாண விழா

மண்ணச்சநல்லூர், மே 25: மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் உள்ள விஷமங்களேஸ்வரர் கோயிலில்    நடந்த பிரம்மா-சரஸ்வதி திருக்கல்யாண விழாவில் திரளான பக்தர்கள்  பங்கேற்றனர்.இக்கோயிலில்  பஞ்சபாண்டவர்களும் மூவேந்தர்களும்  வழிபட்டு வந்துள்ளனர்.  சித்தர்கள் மற்றும் அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்ற சிறப்புகள் வாய்ந்தது   இத்திருத்தலம். இத்தலத்தில் உள்ள கல்யாணசுந்தரரை வழிபட திருமண தடை  நீங்கும். மேலும்  கருத்து வேறுபாட்டால் பிரிந்த கணவன், மனைவி இருவரும் ஒன்று  சேர்வார்கள் என்பதும் பக்தர்கள்  நம்பிக்கை. இத்தலத்தில் வைகாசி விசாக நட்சத்திரத்தில் இங்குள்ள பிரம்ம   தேவருக்கும் சரஸ்வதிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுவது சிறப்பு  வாய்ந்தாகும்.      இந்நிலையில் அதிகாலை 4.30 மணியளவில்   பிரம்ம தேவருக்கும் சரஸ்வதிக்கும் சிறப்பு  அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அபிஷேக  ஆராதனைகளுக்கு பிறகு  பிரம்மாவுக்கும் சரஸ்வதிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

Tags : Brahma-Saraswathi Thirukalayana Festival ,
× RELATED திருச்சி விவசாயியுடன் வேளாண். கல்லூரி மாணவிகள் சந்திப்பு