ஆட்டோ மொபைல்ஸ் கண்காட்சி துவங்கியது சாலைகளில் அணிவகுத்து சென்ற பழங்கால கார்கள்

திருச்சி, மே 25:  தமிழ்நாடு ஆட்டோமொபைல்ஸ் மற்றும் அலைடு இன்டஸ்ட்ரீஸ் பெடரேஷன் கடந்த 1988 முதல் தமிழகத்தில் ஆட்டோமொபைல்ஸ்சில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை வணிகர்கள் வாகனங்கள் பழுது நீக்குவோர் மற்றும் வாகன உபயோகிப்போரும் அறிந்துகொள்ளும் வகையில்  வருடத்திற்கு ஒருமுறை ஆட்டோ மொபைல்ஸ் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. 2 ஆண்டுக்கு ஒருமுறை ஆட்டோமொபைல்ஸ் கண்காட்சிகளை நடத்தப்பட்டு வருகிறது. திருச்சியில் 2006, 2010, 2015 ஆகிய ஆண்டுகள் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சியில் மீண்டும் கண்காட்சியை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று காலை திருச்சி கலையரங்கம் புதிய திருமண மண்டபத்தில் ஆட்டோ மொபைல்ஸ் கண்காட்சி துவங்கியது. கண்காட்சியை சென்னை டிவிஎஸ் அண்ட் சன்ஸ் நிறுவன இணை செயல் இயக்குநர் தினேஷ் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மிண்டா ஆட்டோமோடிவ் சொல்யூசன்ஸ் நிறுவன தலைவர் சிவா.அரவிந்த் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்த ஆட்டோ மொபைல்ஸ் கண்காட்சியில் 120 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்குகளில் ஆட்ேடா ெமாபைல்ஸ் துறையில் முன்னணி நிறுவனங்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் டயர், ஆயில் உபகரணங்கள் கொண்ட அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியை திறப்பை முன்னிட்டு வரலாற்று சிறப்புமிக்க பழைய கார்கள் மற்றும் மோட்டார் பைக்குகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. திருச்சியில் உள்ள முக்கிய சாலைகளில் வாகஙனங்கள் உலா வந்தது. அதனை பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இளம்பெண்கள் ஆர்வமுடன் ரசித்து பார்த்தனர். மேலும் பழைய கார்கள் மற்றும் பைக்குகள் முன் நின்று போட்டோ மற்றும் செல்பி எடுத்து கொண்டனர். இந்த கண்காட்சி நாளை (26ம் தேதி) வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 கண்காட்சி துவக்க விழாவில் தமிழ்நாடு ஆட்டோ மொபைல்ஸ் சங்க கூட்டமைப்பின் தலைவர் முருகேசன், ஆட்டோ எக்ஸ்போ தலைவர் சிதம்பரம், துணைத்தலைவர் ரவி, திருச்சி ஆட்டோ பார்ட்ஸ் சங்கத்தலைவர் சிவகுமாரன் மற்றும் நிர்வாகிகள் சண்முகவேல், சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்துெகாண்டனர்.

Related Stories: