மாநகரில் 4 இடங்களில் இலவச மருத்துவ முகாம்

திருச்சி, மே 25:  திருச்சி மநகரில் இன்று 4 இடங்களில் இலவச பொது மருத்துவ முகாம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  திருச்சி மாநகராட்சியில் இன்று நடக்கும் பொது மருத்துவ முகாமானாது ரங்கம் கோட்டத்தில் திருவானைக்காவல் சன்னதி தெருவில் உள்ள ஆறு நாட்டு வெள்ளாளர் சங்க கட்டிடத்திலும், அரியமங்கலம் கோட்டத்தில் திருவெறும்பூர் பகவதிபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியிலும், பொன்மலைக்கோட்டத்தில் கொட்டப்பட்டு அகதிகள் முகாமிலும், கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில் மாநகராட்சி பிராட்டியூர் மாநகராட்சி பள்ளியிலும் இன்று நடக்கிறது. இந்த முகாமில் குழந்தைகள் நலம், மகப்பேறு, காது மூக்கு தொண்டை சிகிச்சை, கண் சிகிச்சை, சித்த மருத்துவம், இசிஜி, பல் சிகிச்சை, ரத்த அழுத்தம் மற்றும் எடை பரிசோதனை என ஒவ்வொன்றும் தனித்தனி பிரிவுகளாக துறை வல்லுநர்கள் கொண்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன்பெறலாம். இத்தகவலை திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: