பீமநகரில் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்டு

திருச்சி, மே 25:  தண்ணீர் மற்றும் பாதை இல்லாததால் பீமநகரில் தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட நவீன பொதுக்கழிப்பிடம் காட்சி பொருளாக இருந்து வருகிறது. இதனை பயன்பாட்டிற்கு கொண்டு வர மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருச்சி மாநகராட்சி பொன்மலைக்கோட்டத்திற்கு உட்பட்ட 64வது வார்டு பீமநகரில் உள்ள கீழத்தெருவில் மாநகராட்சி சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தில் நவீன பொதுக்கழிப்பிடம் கட்டப்பட்டது. இதில் ஆண்களுக்கு தனி வழி, பெண்களுக்கு தனி வழி ஏற்படுத்தப்பட்டது. தற்போது இந்த ெ்பாதுக்கழிப்பிடத்தில் ஆண்கள் செல்லும் வழியில் வடிகால் வாய்க்கால் உள்ளதால் அதனை தாண்டி செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் இதில் முறையாக தண்ணீர்  வருவதில்லை என்பதால் கழிப்பிடத்தை ஆண்கள் மற்றும் பெண்கள் யாரும்  பயன்படுத்துவதில்லை. இதனால் இந்த பொதுக்கழிப்பிடம் பயன்பாட்டில் இல்லாமல் காட்சி பொருளாக உள்ளது. அப்பகுதியில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் ஏதோ பெயருக்கு கட்டப்பட்டது போல் தற்போது உள்ளது. எனவே கழிப்பிடத்திற்கு தண்ணீர் வசதியும், ஆண்கள் பகுதியில் உள்ள வடிகால் வாய்க்காலை மூடி ஆண்கள் கழிப்பிடத்தை பயன்படுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertising
Advertising

Related Stories: