×

திருச்சுழி அருகே கோயில் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு

திருச்சுழி, மே 25: திருச்சுழி அருகே கோயில் திருவிழவை முன்னிட்டு ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. திருச்சுழி அருகே நெல்லிக்குளம் கிராமத்தில் உள்ள வீரன்சூரன் கோயில் திருவிழா முன்னீட்டு ஜல்லிகட்டு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை , திண்டுக்கல் உட்பட பல மாவட்டங்களிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகளும், 200க்கும் மேற்பட்ட வீரர்களும் பங்கேற்றனர். முதன் முதலாக கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இந்த ஜல்லிகட்டு போட்டியில் வெற்றி பெற்ற காளை மற்றும் வீரர்களுக்கு கட்டில், பீரோ, அண்டா, வெள்ளி காசுக்கள் வழங்கப்பட்டது.

காயமடைந்த வீரர்களின் அவசர உதவிக்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் இருந்தனர். மருத்துவக்குழுவினர் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். இதற்காக தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது, பாதுகாப்பு பணிகளுக்காக 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். மாடுகளும், வீரர்களும் மருத்துவ பரிசோதனைக்குட்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியை காண ஏராளமான கிராமங்களிலிருந்து பொதுமக்கள் வந்திருந்தனர்.

Tags : Jallikkattu ,Tiruchirappalli ,
× RELATED பம்பரம் சின்னம் கிடைத்தால் மகிழ்ச்சி.....