×

இதுவரை சாதித்த கட்சி வேட்பாளர்கள் யார்..? யார்..?

விருதுநகர், மே 25: விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்
1.54 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்குகள் விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று எண்ணப்பட்டன.

தபால் ஓட்டுகளில் சர்வீஸ் ஓட்டுகளை ஸ்கேன் செய்வதில் இணையதள பிரச்சனையால் காலை 8 மணிக்கு துவங்க வேண்டிய தபால் ஓட்டுகள் எண்ணிக்கை பிற்பகல் 12.30க்கு மேல் துவங்கியது. மாவட்டத்தில் தபால் ஓட்டுகள் 8633, ராணுவத்தினருக்கான சர்வீஸ் ஓட்டுகள் 1941 ஆக மொத்தம் 10574 ஓட்டுகளை எண்ணி முடிக்க இரவு 12 மணியானது. அதை தொடர்ந்து இரவு 12.15 மணிக்கு இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை விட கூடுதலாக 1,54,554 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர், தேமுதிக வேட்பாளர் அழகர்சாமியை விட கூடுதலாக 1,54,554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
முதல் சுற்று முதலே காங்கிரஸ் முன்னிலையில் இருந்தது. இதை தொடர்ந்து வாக்குச்சீட்டு எண்ணும் மையத்தில் இருந்த அதிமுக, தேமுதிக, பாஜக ஏஜெண்டுகள் சோகத்தில் இருந்தனர்.

ஒரு கட்டத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஏஜெண்டுகள் மட்டும் மையத்தில் இருந்தனர். நேற்றுமுன்தினம் இரவு 12.15 மணிக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் சிவஞானத்திடம் இருந்த வெற்றி சான்றிதழை திமுக மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் முன்னிலையில் விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் பெற்றுக்கொண்டார்.

Tags : party candidates ,
× RELATED காஞ்சி தெற்கு மாவட்ட ஊரக உள்ளாட்சி...