×

திருவாரூர் தியாகராஜர் கோயிலில் அடுத்த மாதம் தெப்ப திருவிழா

திருவாரூர், மே 25: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்ப திருவிழா அடுத்த மாதம் 14,15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறும் நிலையில் இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜசுவாமி கோயில் இருந்து வருகிறது. சைவசமய தலங்களில் முதன்மையான தலமாக இருந்து வரும் இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது. இதேபோல் இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், கமலாலய குளமும் இருந்து வருகிறது. கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர விழாவில் ஆழி தேரோட்ட விழாவும் பின்னர்  கமலாலய குளத்தில் தெப்பத் திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். அதன்படி ஆழித்தேரோட்ட விழா கடந்த மாதம் 1ம் தேதி நடைபெற்ற நிலையில் தெப்ப திருவிழா அடுத்த மாதம் 14,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி  கோயிலைப் போன்றே 5 வேலி பரப்பளவினை கொண்ட இந்த குளத்தில் பல வண்ண விளக்குகளை கொண்டு  அலங்கரிக்கப்ட்ட தெப்பம் இரவையும் பகலாக்கும் வகையில் குளத்தினை சுற்றி வரும் காட்சி பக்தர்களுக்கு கண்கொள்ளாகாட்சியாக இருக்கும். மேலும் நாள் ஒன்றுக்கு 3 சுற்றுகள் வீதம் நடைபெறும் இந்த தெப்ப திருவிழா தினந்தோறும் மாலை 6 மணி துவங்கி இரவு  9 மணி வரையிலும், 10 மணி துவங்கி 1 மணி வரையிலும், 2 மணி துவங்கி அதிகாலை 5 மணி வரையிலும் என 3 சுற்றுகளாக சுற்றி வருவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.முன்னேற்பாடு பணிகள் தீவிரம்பைக் மற்றும் சைக்கிள்களில் செல்பவர்கள் கூட இப்பாலத்தில் ஏறி செல்ல அஞ்சி திக் திக் என்ற மனதுடன் நடந்து தள்ளியவாறு சென்றது மிகவும் வேதனையாக இருந்தது.

Tags : festival ,Thiruvarur Thiagarajar ,
× RELATED தாய்லாந்தில் தண்ணீர்...