×

விருதுநகரின் முக்கிய சாலைகளில் மாமூலுக்காக லாரிகளை நடுரோட்டில் நிறுத்த அனுமதிப்பதாக குற்றச்சாட்டு? டூவீலரில் செல்வோர் கடும் அவதி

விருதுநகர், மே 25: விருதுநகரில் இஷ்டத்திற்கு வாரி கள்ளகட்டு போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளால் நகரில் வாகன போக்குவரத்தில் இடியாப்ப சிக்கல் விழுந்துள்ளது. விருதுநகரில் கடந்த 5 மாதமாக போக்குவரத்து போலீசார் லாரி, வாகன போக்குவரத்துகளை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை கட்டவில்லை. மேலும் கடந்த 5 மாதமாக நகரின் போக்குவரத்து அதிகாரியும் நான்குவழிச்சாலை, நகருக்குள் வரும் லாரிகளை ஓவர் லோடு கேஸ் போடுவதாக கூறி ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து கேஸ் போட்டால் இவ்வளவு, கேஸ் போடாமல் இருந்தால் இவ்வளவு என குறிப்பிட்ட தொகையை வசூலிப்பதில் குறியாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

நகருக்குள் உள்ள மில்களுக்கு சரக்கு ஏற்றி வரும் லாரிகள் சாத்தூர் ரோடு, சிவகாசி ரோடு, அருப்புக்கோட்டை ரோடு, ராமமூர்த்தி ரோடு, காமராஜர் பைபாஸ் ரோடு, மதுரை ரோடுகளில் சாலைகளில் நிறுத்தி வைக்கின்றனர். லாரிகள் ரோடுகளில் நிறுத்துவதால் டூவீலரில் செல்வோர் சாலையோரத்தில் செல்ல முடியாமல் நடுரோட்டில் செல்கின்றனர். இதனால் வாகன விபத்துகள் ஏற்படும் ஆபத்து உருவாகி உள்ளது.

நகருக்குள் லாரிகள் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள நகராட்சி மைதானத்தில் நிறுத்தி எடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் பலமுறை தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் வசூலில் மட்டும் குறியாக இருப்பதால் லாரி ஓட்டுனர்களும் எப்படி இருந்தாலும் மாமூல் கட்டியாக வேண்டும். அதனால் சரக்கு இறக்க வேண்டிய ஆலைகளுக்கு அருகிலேயே லாரிகளை நிறுத்தி வைப்பதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் எம்ஜிஆர் சிலை அருகில் இருக்கும் பஸ் நிறுத்தம் அகற்றப்பட்ட நிலையில், ரோட்டை ஆக்கிரமித்து தனியார் ஓட்டல் வாகனங்கள் மற்றும் ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்த போக்குவரத்து போலீசாரே நிறுத்த ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மாவட்ட காவல் அதிகாரி உறுதியான முடிவு எடுத்து நகரின் போக்குவரத்தில் விழுந்துள்ள இடியாப்ப சிக்கலை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வர்கள் தெரிவிக்கின்றனர்.

Tags : roads ,Virudhunagar ,
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...