×

சிறுகுளம் ஆக்கிரமிப்பு பகுதியில் நகராட்சி வாகன நிறுத்தம் அமைக்க வலியுறுத்தல்

சிவகாசி, மே 25: சிவகாசி சிறுகுளம் கண்மாய் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தில் சிலர் கடைகள் அமைத்து மீண்டும் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இங்குள்ள காலி இடத்தில் நகராட்சி சார்பில் வாகன நிறுத்தம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி நகராட்சி சிறுகுளம் கண்மாய் கரை பகுதியில் 110க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள் கட்டப்பட்டிருந்தன. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகுளம் கண்மாய்கரை பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்படவில்லை. இங்குள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகளை அகற்றக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.

கோர்ட் உத்தரவு படி ஆக்கிரமிப்பு அகற்றியபோது அப்பகுதியில் குடியிருந்த கணேசன் என்பவர் மண்ணெண்ணை ஊற்றி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொணடார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆக்கிரமிப்பு அற்றும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யபட்டதால் ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று வீடுகள் கட்டி கொடுத்து விட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது.

இதன் போில் பலர் வீடுகளை காலி செய்து வெளியேறினர். இவர்களுக்கு சாட்சியாபுரம் இஸ்ஐ மருத்துவமனை அருகே வீடுகள் அரசு சார்பில் கட்டி தரப்பட்டு சிறுகுளம் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் இடித்து அகற்றப்பட்டது. இடிக்கப்பட்ட கட்டிட இடிபாடுகள் அகற்றப்படாமல் அங்கேயே விட்டுச்சென்றனர். ஆக்கிரமிப்பு இடங்களை எந்தவித பயன்பாட்டிற்கும் கொண்டு வராமல் காலியாக கிடக்கிறது.

இதனால் சிலர் தற்போது மீண்டும் அந்த இடத்தில் தற்காலிக கடைகள், வீடுகள் அமைத்து ஆக்கிரமிப்பை தொடங்கி உள்ளனர். மேலும் லாரி, செப்டிக்டேங்க் வேன்களையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அக்கிரமிப்பு செய்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

எனவே நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு இடத்தில் உள்ள மண் மேடுகளை அகற்றி அப்பகுதியில் நகராட்சி சார்பில் வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது நடைமேடையுடன் கூடிய சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 லாரி, செப்டிக்டேங்க் வேன்களையும் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அக்கிரமிப்பு செய்வோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது

Tags : parking area ,area ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...