தஞ்சை மக்களவை தொகுதியில் 10 பேர் டெபாசிட் இழப்பு

தஞ்சை, மே 25:  தஞ்சை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட 12 பேரில் 10 பேர் டெபாசிட் இழந்தனர்.தஞ்சை மக்களவை தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சேர்த்து மொத்தம் 12 பேர் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் எஸ்.எஸ்.பழநிமாணிக்கம் 5,88,978 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவர் தனக்கு அடுத்தப்படியாக போட்டியிட்ட தமாகா வேட்பாளர் நடராஜனை விட 368129 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் அமமுக வேட்பாளர் முருகேசன் 1,02,871 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகுமார் 57,924 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் செல்வராஜ் 28,274 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சம்பத் ராமதாஸ் 23,477 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி ஸ்டாலின் 5,856 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் விஜயகுமார் 5,452 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் முத்துவேல் 4,509 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர் சமந்தா 2,643 வாக்குகளும், தேசிய மக்கள் சக்தி கட்சி பனசை அரங்கன் 2,041 வாக்குகளும், அப்துல்புகாரி 1244 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 15,105 வாக்குகள் கிடைத்தன. தபால் வாக்குகளில் 829 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இந்நிலையில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் பழநிமாணிக்கம் மற்றும் அதற்கு அடுத்தபடியாக வாக்குகள் பெற்ற தமாகா வேட்பாளர் நடராஜன் ஆகியோரை தவிர மற்ற 10 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். மொத்தம் பதிவான வாக்குகளில் 6ல் ஒரு பங்கு வாக்கு பெற்றால் மட்டுமே டெபாசிட் தொகை திரும்ப கிடைக்கும்.

Advertising
Advertising

தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 11 பேர் டெபாசிட் இழப்பு: தஞ்சை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் நீலமேகம் 87,826 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் காந்தி 54,422 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளரை விட 33,404 வாக்குகள் கூடுதலாக பெற்று நீலமேகம் வெற்றி பெற்றார். இதற்கு அடுத்தப்படியாக அமமுக வேட்பாளர் ரங்கசாமி 19,818 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்தி 11,014 வாக்குகளும், மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் துரைசாமி 9,246 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளர்கள் ரங்கசாமி 495 வாக்குகளும், சந்தோஷ் 400 வாக்குகளும், பழனிவேல் 376 வாக்குகளும், சமாஜ்வாடி பார்வர்டு பிளாக் கட்சி வேட்பாளர் சரவணன் 333 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர்கள் செல்வராஜ் 215 வாக்குகளும், பாபுஜி 199 வாக்குகளும், தினேஷ்பாபு 141 வாக்குகளும், சப்தகிரி 117 வாக்குகளும் பெற்று டெபாசிட் இழந்தனர். போட்டியிட்ட 13 பேரில் 11 பேர் டெபாசிட் இழந்தனர். நோட்டாவுக்கு 2,767 வாக்குகள் கிடைத்தது.

அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்புதஞ்சை மக்களவை தொகுதி மற்றும் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி பெற்றதற்கான சான்றிதழ் வழங்க நேற்று முன்தினம் இரவு வரை காலதாமதமானது. மேலும் எம்பி பழநிமாணிக்கம், எம்எல்ஏ நீலமேகம் ஆகியோர் சான்றிதழ் பெற்ற பின் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வருகிறார்கள் என தகவல் பரவியது. இதையடுத்து திமுக தொண்டர்கள், அண்ணா சிலை முன்பு குவிந்தனர். ஆனால் சான்றிதழ் பெற இரவு 11 மணியாகிவிட்டது. இருப்பினும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்று கொண்டு எம்பி பழநிமாணிக்கம், எம்எல்ஏ நீலமேகம் ஆகியோர் தஞ்சை பழைய பேருந்து நிலைய அண்ணா சிலைக்கு இரவு 12 மணியளவில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் பெரியார் சிலை, கீழவாசல் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தஞ்சை மீண்டும் திமுக கோட்டையாக மாறிவிட்டதால் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க நள்ளிரவானாலும் தொண்டர்கள் அவ்விடத்தை விட்டு கலையாமல் உற்சாகத்துடன் காத்திருந்தனர்.

Related Stories: